திண்டுக்கல் அருகே சுற்றுலா வந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CAR ACCIDENT IN DINDUGAL

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் தேனி மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூரை அடுத்த கீரனூர் பிரிவில் கார் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை கடந்து தாறு மாறாக ஓடியது. பின்னர் எதிர்திசையில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கரை ஓட்டிவந்த கிருஷ்ணகிரி மாவட்டம் மாதம்பள்ளியை சேர்ந்த பிரவீன்குமார், காஞ்சிபுரத்தை சேர்ந்த மனோஜ், தேனியை சேர்ந்த முத்துகாமு, கிருஷ்ணகிரியை சேர்ந்த பாலாஜி  ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

#Dindugal