ஆசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் பாலகிருஷ்ணன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gold winner Tamil Nadu player Balakrishnan died in accident

சென்னை அமைந்தகரை ஷெனாய் நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் தான் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த ஆசிய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தவர். அமெரிக்காவில் தங்கி இருந்த பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். நேற்று இரவு அவர் நண்பர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி எதிரே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரியைச் பாலகிருஷ்ணன் முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக பாலகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளோடு தடுமாறி கீழே விழுந்தார்.  இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் உயிரிழப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

#Balakrishnan