இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை கொண்டாடும் வகையில் வாட்ஸ்அப் செயலியில் ஐ.பி.எல். ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுகிறது.

whats-app-introducing-new-stickers

வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் சார்ந்த சிறப்பு ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு அதிகாரப்பூர்வ கிரிக்கெட் ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகிறது. விரைவில் ஐபோன் பயனர்களுக்கும் இந்த ஸ்டிக்கர்கள் வழங்கப்பட இருக்கிறது. புதிய கிரிக்கெட் ஸ்டிக்கர்களை பயனர்கள் அவரவர் விரும்பும் கிரிக்கெட் ப்ரியர்களுக்கு அனுப்பி மகிழலாம். வாட்ஸ்அப் ஸ்டிக்கர் கொண்டு பயனர்கள் தங்களது கருத்துக்களை புது வழிகளில் வெளிப்படுத்த முடியும். வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றை டவுன்லோடு செய்தபின் பயனர்கள் அவற்றை வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு அனுப்ப முடியும். வாட்ஸ்அப் கிரிக்கெட் ஸ்டிக்கர்கள் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

#IPL2019