பிரதமர் மோடி கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Ponnani's hope on Modi

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தமிழர்கள் உள்ள பகுதிக்கு சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டோம். ஒட்டுமொத்த மக்களும் மோடிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். 5 ஆண்டுகளில் மோடி பல சாதனைகள் செய்துள்ளார் என்றும் இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்றும் தெரிவித்தார். மேலும் நடிகர் கமல்ஹாசன் அர்த்தமற்ற வார்த்தைகளை பேசியுள்ளார். காந்தியை கொன்றதை யாராலும் ஏற்க முடியாது. அதற்கு மதசாயத்தை கமல்ஹாசன் பூசுகிறார் என்றால் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை என்று தான் அர்த்தம். எந்த காரணத்திற்காக கமல்ஹாசன் அவ்வாறு சொன்னார்? என்று தெரியவில்லை. கமல்ஹாசன் போன்ற அரசியல்வாதிகள் தமிழக மக்களால் ஓரம் கட்டப்பட வேண்டியவர்கள் என்பதை தன்னுடைய வார்த்தைகள் மூலமாக நிரூபித்து காட்டி உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

#Modi