நாடாளுமன்ற தேர்தலில் 6-ஆம் கட்டத்திலேயே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுவிட்டோம் என பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Confident of winning the Bharatiya Janata Party - Amit Shah

நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்டங்களாக தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது . 7-வது கட்ட தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 543 இடங்களில் பெரும்பான்மை பெற 272 இடங்களில் வெற்றி பெறவேண்டும். இந்நிலையில், 6-ஆம் கட்ட தேர்தலிலேயே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற்றுவிட்டோம் என பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. 5 மற்றும் 6-வது கட்ட தேர்தலிலேயே பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை நாங்கள் பெற்றுவிட்டோம். 7வது கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகளால் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பாரதிய ஜனதா நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை  தெரிவித்தார்.

#BJP