மத்திய பிரதேசத்தில் ஓட்டுப்போட்டால் பரிசு என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Gift FOR VOTE: Announcement of Election Commission

மத்தியபிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 நாடாளுமன்ற தொகுதிகளில் 3 கட்டமாக 21 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வருகிற 19-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் இந்தூர் தொகுதியும் ஒன்று. இங்கு வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தது மட்டுமின்றி ஓட்டுப் போடும் வாக்காளர்களுக்கு பரிசையும் அறிவித்துள்ளனர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் 62 சதவீதம் மட்டுமே ஓட்டுகள் பதிவாகி இருந்தது. எனவே ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க செய்வதற்காக பிரத்யேகமாக செல்போன் செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். அந்த செயலியை வாக்காளர்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தங்களது விவரங்களை பதிவு செய்ததால், வாக்குப்பதிவு நாளன்று நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இதோடு வாக்காளர்களுக்கு பல்வேறு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.  வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதை தவிர்க்க டோக்கன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#MP