உலக அளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் மிக முக்கியமானது தான் நமது ‘வாட்ஸ்-அப்’.

Whats -App Hackers Warn

தொடக்கத்தில் செய்திகளை பரிமாறும் வசதி மட்டும் இருந்த இந்த செயலியில் தற்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்தல், ‘வாய்ஸ் காலிங்’, ‘வீடியோ காலிங்’ போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ்-அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. வீடியோ, புகைப்படங்கள், கோப்புகள் என பல முக்கிய விஷயங்கள் வாட்ஸ்-அப் மூலம் பகிரப்படுவதால் பாதுகாப்பு அம்சங்களில் அந்நிறுவனம் மிகுந்த கவனம் கொண்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்-அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயன்றதாக வாட்ஸ் அப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சில பயனாளர்களை மட்டும் குறிவைத்து திறன்பெற்ற ஹேக்கர்கள் இந்த சதி வேலையில் ஈடுபட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்களின் அச்சுறுத்தல் இருப்பதால் பயனாளர்கள் அனைவரையும் உடனடியாக வாட்ஸ்-அப் செயலியை ‘அப்டேட்’ செய்யக் கோரி அந்நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. இந்த அப்டேட் மூலம் உங்கள் வாட்ஸ் அப் செயலியை ஹேக் செய்ய முடியாது என்று அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

#Whatsapp