குட்டைப் பாவாடை அணிந்து உணவகத்துக்கு வந்த பெண்ணை, மற்றொரு பெண் தரக்குறைவாக விமர்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

 

உணவகம் ஒன்றுக்கு, குட்டைப்பாவாடை அணிந்து பெண் ஒருவர் தனது தோழிகளுடன் வந்துள்ளார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர், குட்டைப் பாவாடை அணிந்த பெண்ணின் ஆடையை கேலி செய்ததுடன், அந்த பெண்ணை மானபங்கப்படுத்தி பாடம் புகட்டுமாறு அங்கிருந்த ஆண்களையும் அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு குட்டையான ஆடை அணிந்திருந்த பெண்களைப் பற்றி அருகில் இருந்த ஆண்களிடம் நீங்கள் இவர்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இப்படி உடை அணிந்து வருகிறார்கள் என்றும், இவர்கள் எல்லாம் பாலியல் செய்வதற்குத் தகுதியானவர்கள் என்றும் கூறினார். இதைக்கேட்ட இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பினர், ஆடை குறித்து தரக்குறைவாக விமர்சித்த பெண், உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஆனால் கடைசிவரை அப்பெண் தனது கூற்றுக்கு மன்னிப்பு கேட்டகவே இல்லை என்று தெரிகிறது. இதைப் படம் பிடித்த இளம்பெண்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இது வைரலாகி வருகிறது. இவ்விவகாரத்தை அப்பெண்கள் காவல்துறையின் வசம் எடுத்துச் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

#Dress