சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

CBSE publication results ANNOUNCED

நாடு முழுவதும் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்றன. 12ம் வகுப்பு தேர்வில், 18.1 லட்சம் மாணவர்கள், 12.9 லட்சம் மாணவிகள் தேர்வு எழுதினர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வ இணையதளங்களான, cbse.nic.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் மூலமாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். cbse.examresults.net, results.gov.in போன்ற இணையதளங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம். இந்த பொதுத்தேர்வில் 83.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

#CBSE