2019-20-ஆம் ஆண்டு நிகழும் விகாரி வருடத்தில் நல்ல பருவ மழை பெய்து நாடு செழிக்க யாகம் நடத்திட முக்கியத் திருக்கோயில்களுக்கு இந்த சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

according-to-the-hindu-religious-endowments-department-the-rain-came-to-light

அதன்படி, நிகழ்ச்சிகளை தத்தம் பிரிவில் உள்ள முக்கிய திருக்கோயில்களில், அந்தந்த கோயில்களின் பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு நடத்திட அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.  பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல். அருள்மிகு நந்திப்பெருமானுக்கு நீர்த்தொட்டிகட்டி நந்தியில் கழுத்துவரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல். ஓதுவார்களைக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமறை ஓதுதல். திருஞானசம்பந்தர் இயற்றிய 12-ம் திருமுறையில் தேவார மழைப் பதிகத்தைக் குறிஞ்சி என்ற பண்ணில் பாடி வேண்டுதல். நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷிணி, மேகவர்ஷினி,கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களைக் கொண்டு வாசித்து வழிபாடு செய்தல். சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாரா பாத்திர நீர் செய்தல். சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தல்.

#HinduReligiousEndowments