நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 Next update on Thalapathy 63

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தற்போது இவிபி ஃபிலிம் சிட்டியில் கடந்த 2 வாரமாக நடைபெற்று வருகிறது. இதில் விவேக், யோகிபாபு, விஜய் இடையிலான காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து கால்பந்து பயிற்சி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஷூட்டிங் மேலும் ஒரு வாரத்திற்கு தொடரும் எனவும் கூறப்படுகிறது.மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Thalapathy63 #Vijay