இயக்குநர் செல்வராகவன், நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள ‘என்ஜிகே’ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா – இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள். இவர்களுடன் பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா ஆகியோர் நடித்துள்ளார்கள். என்ஜிகே படத்தின் டீசர் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது.கடந்த மாதம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் திரைப்படம் மே 31 -ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் ‘என்ஜிகே’ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

#NGK