டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக  விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளன.

Young director joining with actor Vikram

கடந்த வருடம் வெளிவந்த படங்களில் ‘இமைக்கா நொடிகள்’ படமும் வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் இடம் பிடித்தது. விக்ரம் தற்போது ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஜுன் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ மீண்டும் எப்போது தொடங்கும் என்பது யாருக்கும் தெரியாது. இதனிடையே, ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக விக்ரம் தீவிர உடற்பயிற்சியில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன. அந்தப் படம் தொடங்குவதற்கு முன் குறுகிய கால தயாரிப்பாக அஜய் ஞானமுத்து படத்தில் அவர்  நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

#Vikram