இயக்குனர் ஹரியுடன் 16 வருடங்கள் கழித்து நடிகர் சிம்பு மீண்டும் ஒரு படத்தில் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

The famous actor who reunites with director Hari

நடிகர் சிம்பு தற்போது லண்டன் சென்று எடைக் குறைப்பு சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். அவர் மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இப்போது, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும், ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. முன்னதாகவே சிம்பு, இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2003-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘கோவில்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தற்போது 16 வருடங்களுக்கு பின் மீண்டும் அவருடைய  இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

#Hari