சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் – ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் முன்னோட்டம்.

NET PREVIEW

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் படம் தான் ‘நட்புனா என்னானு தெரியுமா’. கதாநாயகனாக புதுமுகம் கவின் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள்.  ஒளிப்பதிவு – யுவா, இசை – தரண், எடிட்டிங் – ஆர்.நிர்மல், கலை – எம்.எஸ்.பி. மாதவன், நடனம் – சதீஷ் கிருஷ்ணன், தயாரிப்பு – ரவீந்தர் சந்திரசேகரன், இயக்கம் – சிவா அரவிந்த். இயக்குனர் நெல்சனின் உதவியாளராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார்.

#NET