‘நேர்கொண்ட பார்வை’ படம் ரிலீஸாக இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில், அஜித் அடுத்து நடிக்கப்போகும் பட அறிவிப்பை தனது பிறந்த நாளான மே1-ஆம் தேதி  அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

big-suspense-is-going-to-break-up-by-ajith

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’யின் படப்பிடிப்பு முடிந்து தற்போது முழு ஓய்வில்தான் இருக்கிறார் அஜீத். இந்நிலையில் அவர் அடுத்து நடிக்கபோகும் படம் என்ற பெயரில் நான்கு விதமான வதந்திகள் நடமாடுகின்றன. 1.போனிகபூருக்கு அடுத்த படமும் செய்து தருவதாக ஒப்பந்தம் இருப்பதால் இதே இயக்குநர் வினோத்தை வைத்து அடுத்த படம். 2. போனிகபூர் அஜீத்தை இந்தியில் சோலோ ஹீரோவாக அறிமுகம் செய்யவிரும்புவதால் இந்திப்படம்.3. மங்காத்தா’ சூப்பர் ஹிட் கொடுத்த வெங்கட் பிரபுவுடன் இணைந்து இன்னொரு படம். ’நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பில் இதற்காக அஜீத்தை இருமுறை சந்தித்தார் வெங்கட் பிரபு. நான்காவதாக ‘விஸ்வாசம்’ எதிர்பார்த்ததை விட வசூல் அள்ளியதால் மீண்டும் சிவாவுடன். இந்த 4 செய்திகளையுமே அஜீத் தரப்பு இதுவரை மறுக்கவில்லை.படம் துவங்கும் சமயம் அஜீத்தின் பிறந்தநாளன்று நேர்கொண்ட பார்வை ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டதால் அப்செட் ஆகியிருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் எண்ணத்துடன் இந்த லிஸ்டில் தான் அடுத்து நடிக்கப்போகும் பட அறிவிப்பை தனது பிறந்த நாளன்று அஜீத் அறிவிக்கவிருக்கிறார்.

#NerkondaPaarvai #Thala #AjithKumar #BoneyKapoor #VidyaBalan