‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் ஜெய் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என்ற அறிவிப்புகள் வெளியான நாளில் இருந்தே அவர் யாருடன் மோதுவார் என்பதை அறியும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது.

Are these villains in the film Breaking News? Details inside

இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில் ராகுல் தேவ் மற்றும் தேவ் கில் ஆகியோர் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. “நிச்சயமாக, சூப்பர் ஹீரோவுக்கு இணையாக சக்திவாய்ந்த சூப்பர் வில்லன்கள் இருக்கும் போது மட்டுமே மோதலின் தீவிரம் மிகவும் கடுமையானதாக இருக்கும். நிறைய விஷயங்களை மனதில் வைத்து வில்லனை தேடியபோது, ராகுல் தேவ் மற்றும் தேவ் கில் ஆகியோரை நடிக்க வைக்க முடிவெடுத்தோம். ஏனெனில் அவர்களது உடற்கட்டும், அவர்களின் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை. அத்தகைய நடிகர்களை கதை கோரியது. இந்த இருவருமே படத்திற்கு முழுமையான பொருந்துவார்கள் என உணர்ந்தோம். மேலும், அவர்கள் இருவருக்கும் சில முக்கியமான ஒற்றுமைகள் உண்டு. இருவருமே சினிமா அர்ப்பணிப்பு உடையவர்கள், வில்லனாக நடித்தாலும் அகில இந்திய அளவில் பிரபலமானவர்கள் என்று படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

#Breakingnews